dharulmuhabbaorphanagetrust.com

சேவை நிறுவனங்கள்

எங்களுடைய சேவைகள்
கல்வி உதவி
மருத்துவ உதவி
ஆதரவற்றோர்க்கு உதவி
அநாதைகளுக்கு உதவி

நபியோடு சுவனத்தில் இருக்க ஆசையா?


அல்லாஹ்வின் உதவியால் கடந்த 5 ஆண்டுகளாக தாருல் மஹப்பா ஆதரவற்றோர், முதியோர், குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இலவசமாக இயங்கிவரும் இல்லம்.

நமது இல்லத்தில் ஒரு நபருக்கு ஒரு நாள் உணவு தேவை ரூ.150/- ஆகும். ஒரு மாதத்திற்கு 150 × 30= 4500/- தேவை உள்ளது.

நமது மதரசாவில் மாதம் 60 சிப்பம் அரிசி தேவை உள்ளது. தங்களால் இயன்ற ஒரு (1) சிப்பம் அளவிற்கு உதவியை எதிர்பார்க்கிறோம்.

நமது இல்லத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் & முதியோர்கள் அவர்களுக்கு தேவையான பொருட்கள்

1. பழைய துணிகள் / புதிய துணிகள்

2.டயப்பர்ஸ் (Diapers) தினசரி தேவைப்படுகிறது.

தாருல் மஹப்பாவின் பணிகள் :

1. அனாதைகளை ஆதரித்தல்

2. ஊனமுற்றோர்களை ஆதரித்தல்

3. விதவை பெண்களை ஆதரித்தல்

4. கைவிடப்பட்ட பெண்களை ஆதரித்தல்

தாருல் மஹப்பாவின் களப்பணிகள் : இஸ்லாத்தை தழுவக் கூடிய மக்களை ஆதரித்தல் உணவு, உடை, கல்வி மற்றும் தங்குமிடம் அளித்தல்.

எவர் ஒரு ஆத்மாவை வாழ வைக்கின்றாறோ அவர் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார். (அல்குர்ஆன் 5:32)

தாருல் மஹப்பாவின் சிறப்பு தன்மை: மனிதநேய அடிப்படையில் அனைத்து சமூக மக்களையும் ஆதரித்து வருகிறோம்.

தாருல் மஹப்பாவின் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு திருமணம் செய்துவைத்தல்.

தாருல் மஹப்பாவின் வருங்கால திட்டங்கள் :

1. இறை இல்லம் அமைத்தல்

2. திரு குர்ஆன் மனைப்பள்ளி

3. நூலகம் அமைத்தல்

4. இலவச ஆம்புலன்ஸ் சேவைகள் அமைத்தல்

தாருல் மஹப்பாவின் அழைப்பு பணிகள்:

தாவா சென்டர் அமைத்தல் இஸ்லாத்தை தழுவக்கூடிய மக்களுக்கு அடிப்படைக் கல்வி வழங்குதல்

தாருல் மஹப்பாவின் ஆலோசனை மையம் :

1. வாழ்வியல் ஆலோசனைகள்

2. கல்வி ஆலோசனைகள்

3. அரசு தேர்வுக்கான ஆலோசனைகள்

தாருல் மஹப்பாவின் திட்டங்கள் :

1. சாலை ஓரம் பசியால் வாடும் மக்களுக்கு உணவளித்தல் மற்றும் ஆதரவு அளித்தல்.

2. வட்டி இல்லாத பைத்துல் மால் திட்டம் அமைத்தல்.

உங்கள் பகுதியில் இருக்கக்கூடிய ஆதரவில்லாத மக்களை தாருல் மஹப்பாவை தொடர்பு கொண்டு அவர்களுக்கு உதவுங்கள்.

எவர் ஒருவர் அனாதைகளை ஆதரிப்பாரோ நாளை மறுமையில் நானும் அவரும் ஒன்றாக இருப்போம். நபி(ஸல்)