நிர்வாகம்
தாருல் மஹப்பா (அன்பு இல்லம் ஒரு பார்வை)
(அல்ஹம்துலில்லாஹ்) தாருல் மஹப்பா (அன்பு இல்லம்) 2018 மார்ச் 3-ஆம் தேதியன்று ஆலத்துடையான்பட்டி என்னும் சிறிய கிராமத்தில் 6 அநாதை குழந்தைகளை வைத்து ஆரம்பிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் சிறிய குடிசையில் ஒருவருடம் வரை நடந்தது. பிறகு வாடகை இடத்தில் மாற்றியமைக்கப்பட்டது. தேவைக்கு ஏற்ப்ப மேலும் வாடகை இடம் பிடித்து செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் முற்றிலும் இலவசமாக அ நாதை குழந்தைகள், ஏழை பிள்ளைகள் கைவிடப்பட்ட முதியவர்கள் என உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம் கொடுக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். (அல்ஹம்துலில்லாஹ்) மேலும் அரசு வழிகாட்டலின்படி 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், 28-ம் தேதியின்படி அறக்கட்டளையாக பதிவுசெய்யப்பட்டது. அதில் நிறுவனராக ப.முஹம்மத் ஸுஃப்யான் அஷ்ரஃபீ அவர்களும் அறங்காவளர்களாக முஹம்மத் பாஸித் அவர்களும் பாலிஹா மரியம் அவர்களும் நியமிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது மேலும் சாட்திகளாக இஸ்ஹாக் அவர்களும் விஜய் அவ்ர்களும் அன்றிலிருந்து முறைப்படுத்தப்பட்ட அரசால் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக திகழ்கிறது.